Friday, April 29, 2011

வானம் - எல்லையற்றது...




வாசகர்கள் கவனத்திற்கு... இது வானம் படத்தின் விமர்சனம் அல்ல... மாறாக அதன் பாதிப்பால் ஏற்பட்ட பிதற்றல்...


பெரிய எதிர்ப்பாரப்புகள் ஏதும் இல்லாமல்தான் நான் படம் பாரக்க போனேன். ஆனால் ஒரு கனத்த மனத்துடன் திரும்பி வந்தேன். அது ஒரு திரைப்படம் என்று என் அறிவு ஏற்றுக்கொள்ள என்னால் இதுவரை முடியவில்லை. எல்லா விதத்திலும் அற்புதம்.

ஸ்டிஆர் என்று டைட்டில்ல போடும் போது எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை. இவ்வளவு பந்தா தேவைதானா என்று யோசிச்சன். ஆனால் சிம்பு.. நீங்க இந்த படம் நடிச்சதுக்கு எவ்வளவு பந்தா வேணும் என்றாலும் போடலாம்..

தீவிரவாதம், பகட்டு, அதிகார வெறி, சுயநலம், அறியாமை, இயலாமை போன்று இந்த உலகத்கில் ஊடுறிவிப்போன விடயங்களை நன்றாக சொல்லி இருக்கிறார். தற்கால சினிமாவில் ஒரு சிறிய விடயத்தை எடுத்து அதை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்படும். ஆனால் மனித முதிர்ச்சிக்கு இதுவரை கிட்டாத விடயங்களை நன்றாக கையாண்டுள்ளார் இயக்குணர்.. அதை நெஞ்சுருகும் வித்த்தில் கொடுத்தும் உள்ளார்.

ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தை, அனுஷ்காவிற்கு கூட வரும் அரவாணி, லாரி ஓட்டுற சிங், கடைசியாக டிராக்டர் நம்பர் பிளேட்டில் கணக்கு போடும் சிறுவன் என்று ஒவ்வொரு விடயங்களையும் நன்றாக பார்த்து பார்து செதுக்கியுள்ளார் இயக்குணர்.

நடிப்பு சொல்லவே தேவையில்லை.. சிம்பு, பரத். பிரகாஷ்ராஜ், சரண்யா, அனுஷ்கா என்று எல்லாரும் கதைக்குள்ள ஒன்றிக்க வைத்துவிட்டனர்.

தமிழ் சினிமாவின் மசாலா பாணி பல இடங்களில் தெரிந்தாலும். அது மிகவும் நகச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்திச்சு...

படம் முழுக்க சிம்புதான தெரிவதுதான் சிம்பு பட வழக்கம். ஆனால் இதில எல்லாருக்கும் வாய்ப்பு இருந்திச்சு... இசையில யுவன் பிச்சிட்டாரு. அதுவும் "வானம்..." பாட்டு ஒவ்வொரு முறை ஒலிக்கும் போது அது மனசை தொடுகிறது. நிரவ்ஷாவின் கமராவைக் கவனிக்க முடயாத அளவிற்கு கண்கள் சில நேரம் கலங்கி போகிறது. அதிலயும் திருடிட்டு போன காசை சிம்பு மறுபடியும் கொடுக்கிற காட்சி அற்புதம்...

படத்ததில் குறைகள் இருக்குது... ஆனால் அதை கிளைமாக்ஸிற்காக கண்டுக்காம விடலாம். அன்பே சிவம், ரங் டீ பஸந்தீ (ஹிந்தி) போன்ற படங்களின் கிளைமாக்சிற்கு நிகரான நெஞ்சைத்தொடும் கிளைமாக்ஸ்...

அதிலயும் கடைசியா அனுஷ்கா சொல்ற டயலொக்..
"எப்படியும் வாழலாம் எண்டிருந்த எங்க வாழ்ககையை ஒரு நல்ல சாவு இப்படித்தான் வாழனும் என்று காட்டிருச்சு.." சூப்பர்..




வானம்.. என்றுமே எல்லையற்றது....

4 comments:

  1. வானம் உங்களை வசப்படுத்திவிட்டது சுருக்கமான பதிவில் தெரிகின்றது... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இது போன்ற படங்கள் தொடர வேண்டும்..

    வானம் விமர்சனம்
     என்ன வாழ்க்கைடா இது?

    ReplyDelete
  3. வானம் பலர் வாழ்க்கை... வானம் பற்றிய பதிவு மிகச் சிறப்பு

    ReplyDelete
  4. தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html

    ReplyDelete