Friday, April 22, 2011

இந்த அண்டத்தின் தொடக்கம் : கடவுளின் இருக்கை




இதைப்பற்றி பலர் தங்களுடைய பதிவுகளை எழுதியுள்ளார்கள். அந்த வகையில் நான் முதலாதவனும் கிடையாது, கடைசியும் கிடையாது. ஆனால் எனக்கு தெரிந்தவற்றை பகிரவேண்டும் என்ற முனைப்புடனே இதை எழுதுகிறேன்...


இந்த உலகத்தில் மனிதன் சிந்திக்க தொடங்கிய காலங்களில் இருந்து ஒரு கேள்வி என்றுமே இருந்து வந்துள்ளது. அது இந்த பூமி எவ்வாறு உருவானது..?? அதை உருவாக்கியது யார்...?? அதாவது முட்டையில் இருந்து குஞ்சு வந்ததா...?? குஞ்சிலிருந்து முட்டை வந்ததா...?? என்றது.


கடவுள் ஒரு உணர்வுசார்ந்த நிலை... அதன் இருக்கையை பற்றி கேள்விகேட்பது முட்டாள்தனமானது எனற கூறுபவர்களுக்கு... நான் கூறவருவது ஒரு விஞ்ஞானம் நோக்கிய தேடல்....




காலம் காலமாக இந்த கேள்விகளுக்கான விடைகள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியுடன் மாறிவந்துள்ளது. பூமி தட்டையானது அது மாறாக உருண்டையாக இருந்திருந்தால் கடல் நீரெலல்லாம் வெளியில் கொட்டுண்டிருக்கும் என்ற அடிப்படைவாதக் கருத்தில் இருந்து மனிதன் இன்று SuperString, M theory என்று விரிவடைந்துவிட்டான். ஆனாலும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை யாராலும் அறுதியாக கூற முடியவில்லை. கடவுள் என்ற இறுதியும் முடிவுமற்ற ஒரு பொருளே இந்த அண்டத்தை உருவாக்கியது என்ற கூறி ஒரு அணியினரும். இல்லை அது விஞ்ஞான சக்திகளால்தான் உருவாக்கப்பட்டது என்று இன்னொரு அணியினரும் இரு தரப்புகளில் நின்றுகொண்டு போரிடுகிறார்கள்.


இந்த கேள்விகளுக்கான விளக்கங்களை சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு போதாது. மாறாக இந்த கேள்விகளுக்கானஒரு சில விளக்கங்களை 1988 ஆம் ஆண்டு Stephen Hawking என்ற பிரபல விஞ்ஞானியால் The origin of the universe என்கிற பேச்சிலிருந்து சில தகவல்களை தருகிறேன்.

அந்த தொகுப்பில் உள்ள பல விடயங்கள் கற்றுத்தேர்ந்த  பௌதீகவியலாளர்களிற்கு மட்டுமே விளங்ககூடியது. எனக்கு அதில் உள்ள பல விடயங்களை பற்றி தெரியாது. உதாரணத்திற்கு அவர் கையாளும் General Relativity, Quantam mechanics போன்ற கொள்கைகள் பற்றிய சரியான அறிவு எனக்கு இல்லை.

அதாவது ஹபிளின் கண்டுபிடிப்பில் இருந்து உறுதி செய்யப்பட்ட அவதானங்களின் அடிப்படையின் அதுவரை நியூட்டன்  கூறி வந்த நிலையான அண்டம் என்ற கொள்கை பொயக்கிறது.  ஏன் ஐன்ஸடீனே கூட தன்னுடைய விசேட சார்புக் கொள்கையில் அண்டம் நிலையானது மாறாதது என்று கூறியுள்ளார். அப்படி இந்த அண்டத்தை நிலையாக வைப்பது cosmological constant என்று கூறுகிறார். ஆனால் பின்நாளில் அது இல்லை என்றும், அவ்வாறு தான் கூறியது பெரிய பிழை என்றும் ஏற்றுக்கொள்கிறார்.


அந்த வகையில் தன்னுடைய பேச்சில் ஹாக்கிங் அண்டம் ஒரு ஒருமைப்பாட்டில் இருந்து உருவாகவில்லை என்றும். அதற்கு சான்றாக தன்னுடைய no boundry கொள்கையையும் முன் வைக்கிறார்.


ஆனால் அவருடைய பேச்சில் எனக்கு மிகவும் முக்கியம் எனப்பட்ட கடைசிப் பந்தியை இங்கு மொழிபெயர்ப்புடன் சாராம்சத்தை தருகிறேன்.


"....என்னுடைய இந்தக் கொள்கையுடன். இந்த அண்டத்தின் உருவாக்கத்தின் போது பௌதீக விதிகள் செல்லாது என்ற கொள்கையை இல்லாமல் செய்கிறது. மாறாக இந்த அண்டத்தின் இயக்கம் உறுதிசெய்யப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளின் பிரகாரம் இயங்குகிறது என்பது உண்மையாகிறது. அதாவது இந்த உலகத்தினதும் அண்டத்தினதும் மொத்த இயக்கத்தையும் விஞ்ஞானத்தால் விளங்கப்படுத்தமுடியும். அது இந்த அண்டத்தை கட்டுப்படுத்துவது கடவுள் இல்லை என்பதை கூறவருகிறது. அதாவது இந்த அண்டம் ஆரம்பத்தில் உருவாகிய விஞ்ஞான விதிகளின் பிரகாரம் இயங்கி வருகிறதே தவிர கடவுளின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இந்த அண்டம் ஏன் தன்னை உருவாக்கிக் கொள்ள முடிவெடுத்தது என்ற கேள்விக்கு என்னிடமோ விஞ்ஞானத்திடமோ விடை இல்லை. ஒருவேளை கடவுள் இந்த கேள்விக்கு பதில் சொல்லலாம்...."





மேலதிக வாசிப்பிற்கு :- http://www.ralentz.com/old/astro/hawking-1.html


இது பற்றி மேலதிக தகவல்களை பெறு விரும்புவர்கள். சுஜாதாவின் "கடவுள்" தொகுப்பை வாசிக்கவும்.

-மோனி...

1 comment:

  1. நல்ல தேடல் ..இன்னும் அலச வேண்டியது நிறைய இருக்கிறது . இந்த கடவுள் பௌதீகம் பிரச்னைக்கு சுஜாதாவின் ஒரு வசனம் ஞாபகம் வருது "Big Bang" தியரி வரை கடவுளின் தேவை இல்லாமல் போய் விட்டது ".:))

    ReplyDelete