Tuesday, February 22, 2011

சுஜாதாவின் 'கொலையுதிர் காலம்' மற்றும் The Hound of Baskevilles ஒரு ஒப்புநோக்கு..




என்ன இப்படி ஒரு விசித்திரமான தலைப்பு என்று உங்கள் சிந்தனை ஓட்டம் எனக்கு புரிகிறது. 1901 எழுதப்பட்ட ஒரு ஆங்கில நாவலையும் 1981 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு தமிழ் நாவலையும் ஏன் மீண்டும் தோண்டி எடுத்து அதுவும் ஒப்பிட்டு ஆராய வேண்டும். எனக்கு வேறு வேலை எதுவும் இல்லையா என்பது போல இருக்கு உங்கள் பார்வை.


சுஜாதா அவர்களின் தீவிர இரசிகன் நான். அவரின் பன்முகத்தன்மையை நான் மிகவும் வியந்திருக்கிறேன். அவருடைய இழப்பு தமிழ்  இலக்கிய மற்றும் விஞ்ஞான துறைக்கு மிகவும் ஈடுகட்ட முடியாத ஒன்றாகும். அவருடைய கொலையுதிர் காலத்தை வாசித்துக் கொண்டு இருக்கும் போது அது Aurthur Cannon Doyleஆல் எழுதப்பட்ட கதைக்கு கருவிலும் அமைப்பிலும் பெரும் பங்கு தழுவி இருந்தது என்பது என்னை மிகவும் உறுத்தியது. அதனால் பல வருடங்களிற்கு முன்னர் வாசித்த ஆங்கில நாவலை மீண்டும் வாசித்து இந்த ஒப்புநோக்கை எழுதியுள்ளேன்.

Sherlock Holmes, Dr. Watson என்ற கதாபாத்திரங்கள் ஆங்கில நாவல் வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். இருவரும் சேர்ந்து கொலைகள் கொள்ளைகள் பற்றிய துப்பறியும் கதைகள் மிகவும் ஈர்ப்பனவாகவும் துடிப்புடையதாகவும் இருக்கும். Aurthur Cannon Doyle என்ற நாவலாசிரியரால் உருவாக்கப்பட்ட இந்த கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. அந்த வரவேற்பிற்கு கட்டியம் கூற ஒரு சிறு சம்பவத்தை கூறலாம். ஒரு கதையில் Sherlock Holmesஜ கொன்றுவிட்டு இதோடு அந்த கதாப்பாத்திரத்தில் கதை எழுதுவதில்லை என்று ஆசிரியர் கூற. மக்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி Sherlock Holmes மீண்டும் உயிர்பிக்கப்பட்டார்.

இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் ஒரு சில நாவல்களையும் அவர் எழுதயுள்ளார். இந்த நாவல்களை தொட்ட எவரும் அதை தண்ணி ஆகாரம் மறந்து படிப்பார்கள். அந்த வகையில் வந்த நாவல்தான் The Hound of Baskervilles.

The Hound of Baskervilles - (கதைச்சுருக்கம்)

Baskervilles என்வர்கள் காலம் காலமாக பெரும் சொத்து படைத்த குடும்பம். அவர்களுடைய வீடு ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது.  Charles Baskerville என்ற அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மர்மமான முறையில் இறந்து போகிறார்.  அவரை Baskerville குடும்பத்தினை தொடரும் ஒரு பேய்தான் கொன்றது என்று நம்பப்படுகறது.  அந்தப் பேய் பல தசாப்தங்களுக்கு முன்னால் Baskerville குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் வல்லுறவுககுட்பட்ட பெண்ணால் ஏவப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதனால் இறுதியாக அந்த பெரும் சொத்துக்கு வாரிசு இறந்தவருடைய மருமகன்  Henry Baskervilleதான். ஆனால் அவரை ஒரு ஆபத்து சூழ்கிறது. அதே பேய் அவரையும் கொல்ல துடிக்கிறது. இதை ஆராய்ந்து அவரை காப்பாற்ற Sherlock Holmes வருகிறார். இறுதியாக அப்படி ஒரு பேயும் இல்லை ஆனால் எப்போதோ தொலைந்துபோன ஒரு தெரியாத வாரிசுதான் இதை செய்கிறது என்பதை கண்டுபிடித்து Henryயை காப்பாற்றுகிறார் என்று முடிகிறது கதை


கொலையுதிர் காலத்திற்கு ஒரு சுருக்கம் சொல்ல நான் விரும்பவில்லை ஏனென்றால் அதை வாசித்தவர்களுக்குதான் என் கட்டுரையின் தலைப்பு ஓர் ஈர்ப்பைக் கொடுத்திருக்கும்.

அதனால் நேரடியாக ஒற்றுமைகளுக்கு போகிறேன். அங்கே Baskervilles என்பது போல இங்கே வியாசர்கள். அங்கே எவ்வாறு ஒரு மனிதனை விட பெரிய நாய் கொல்வது போல இதில் ஹோலோகிராப். அங்கே எவ்வாறு தெரியாத வாரிசு போல இங்கேயும் தெரியாத யாரோ வாரிசு என்று பல அடிப்படைகளில் ஒற்றுமை என்னை திகை்கக்க வைத்தது.

இது சுஜாதாவின் தனித்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.. இதை நீங்களும் ஆங்கில நாவலின் கதைச்சுருக்கத்தை சொல்லும் போது உணர்ந்திருப்பீர்கள். ஆனாலும் என்னபை் பொறுத்தவரை சுஜாதாவின் கதை சொல்லும் பாணியும் கதாப்பாத்திர அமைப்பும் The Hound of Baskervilles உடன் ஒப்பிடும் போது மிகவும் சிறப்பாக காணப்பட்டது. Sherlock Holmes என்ற கதாப்பாத்திரத்திற்கு எல்லாம் தெரியும் என்ற மேதாவிலாசத்தன்மை இதில் இல்லாமல் செய்த சுஜாதா, கணேஷ் என்ற முக்கிய கதாபாத்திரத்துடன் வாசகர்களை மிகவும் துடிப்புடன் கொண்டு நகர்த்தியுள்ளார்.

ஒரு திரில்லர் கதை என்ற பரிமாணத்துடன் நின்றுவிடாது அதனுள் விஞ்ஞானத்தையும் புகுத்தி முடிவில் அமானுஷ்யமா விஞ்ஞானமா என்ற முடிவை வாசகர்களுக்கு விட்டது அழகு.

சுஜாதாவின் தனித்தன்மைகுள் எனக்கு எழுந்த கேள்விகளுக்கு நானே கண்ட விடையை உங்களிடம் பகிர்திருக்கிறேன். ஒருவழியா நானே குழம்பி நானே தெளிஞ்சிட்டன். என்னைப்போல குழம்பியிருக்கும் சிலருக்கும் இது ஒரு தெளிவைத் தந்திருக்கும் என்று நம்புறன்.



கருவில் ஒற்றுமை பல காணப்பட்டாலும் கதை சொல்லும் நுட்பத்திலும் போக்கிலும் சுஜாதாவின் ஒரிஜினாலிட்டி அவரை அவராக வைக்கிறது என்பதே என் முடிவு.


-மோனி...

3 comments: