Saturday, April 23, 2011
மயிர்ச்சடையானவர்க்கே மடங்கள் உண்டாக்குகிறோம்....
ஒரு மனிதனின் மரணத்தை வைத்து விமர்சனங்களை வெளியிடுவது தவறானதுதான் ஆனால் நேற்று நடந்த சம்பவம் என்னை இந்த பதிவை எழுத வைத்துவிட்டது. இது யார் மனதையேனும் பாதிக்குமேயானால் என்னை மன்னிக்கவும். ஒரு மனிதனைப்பற்றி விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை.
நேற்று எனக்கு தெரிந்த உறவினர் வீட்டை போயிருந்தேன். அவர் தீவிர சாய் பாபா பக்தர். அவர் வீட்டில் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் மிகுந்த பிரச்சினையில் உள்ளார். நேற்று வழமையை விட கவலையாக இருந்தார். ஏன்.. சாய்பாபாவின் உடல் நிலை மோசமாகிவிட்டது அவரை மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். எப்படியாவது போய் புட்டபத்தியில் பார்க்க வேண்டும்.
சாய்பாபா என்ற ஒரு தனிமனிதன், அவர் அப்படி என்ன சாதித்துவிட்டார். சாய் பக்தர்களை கேட்டால் சொல்வார்கள்.. "அவர் கடவுளாக வாழ்ந்தவர்.." என்ன கொடுமை இது... கடவுள் என்ற கருப்பொருளே இல்லை என்று விஞ்ஞானம் நீரூபிச்சிட்டு வருது இதில மனிதன் கடவுளா...??
நான் மறுக்கவில்லை எத்தனையோ மனிதர்கள் மக்கள் மத்தியில் கடவுளாக வாழ்கிறார்கள் காந்தி, மண்டேலா போன்ற பலர் உள்ளார்கள்தான். அவர்கள் தங்கள் வாழ்க்கையே மக்களுக்காக அர்பணித்தவர்கள்... அப்படி ஒரு தியாகத்தையும் பாபா செய்துவிடவில்லை...
சாய் டிரஸ்ட் பண்ட் எத்தனையோ ஏழை மக்களின் மருத்துவ கல்வி செலவிற்கு உதவியுள்ளது என்று பலர் மார் தட்டுகிறார்கள்.
சாய் பாபா தன்னுடைய சொந்த காசில இருந்தா செய்தார். மக்கள் கொடுத்த காசை மக்களுக்கே கொடுக்கிறது எப்படி பெருமை. அவர் பல சித்துகள் செய்தாராம்... சித்துகள் செய்துவிட்டால் கடவுள் ஆகிவிடுவாரா...?? இப்படித்தான் வாயில இருந்து லிங்கம் எடுக்கிற எத்தனை பேரிடம் ஏமாந்து போனோம்.
"சாயின் உடல் நிலைக்காக பக்தர்கள் வீசேட பிரார்த்தனை...".. என்ற செய்தியை பத்திரிக்கையில் வாசித்து மிகுந்த வருத்தப்பட்டேன். ஒருமனிதன் தன் அந்திம காலத்தில் போய் சேரவேண்டிய நேரத்தில் போய் சேருகிறார். அதைத் தடுக்க சோகமாக பெரிய பிரார்ததனைகள்... ஆனால் இங்கே ஈழத்தில் எத்தனையோ இளம் பிஞ்சுகள் பலியிடப்பட்ட போது யாருமே பேசவில்லை... அப்போது உங்கள் பிரார்த்தனைகள் எங்கே...??
இது எனக்கு ஜெயகாந்தனின் ஒரு கவிதை ஞாபகம் படுத்துகிறது....
நடந்தும் பிறந்தும் ஓடியும் ஊர்ந்தும்
நாமெலாமிங்கு அலைகின்றோம்
இடந்தெரியாமல் முகம் தெரியாமல்
எவரையோ இங்கு தேடுகின்றோம்
தடமென ஒன்றுமில்லை நடந்து நடந்து
தடங்கள் உண்டாக்குகின்றோம்
இடமென ஒன்றுமில்லை இருந்து - இருந்து
இடங்கள் உண்டாக்குகன்றோம்
விடமென ஒன்றுமில்லை வெருண்டு வெருண்டு
விடங்கள் உண்டாக்குகிறோம்
மடமென ஒன்றுமில்லை மயிர்ச்சடை யானவர்கே
மடங்கள் உண்டாக்குகிறோம்....
Labels:
சாய்பாபா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment