Monday, April 18, 2011

ஜநா அறிக்கையும் தமிழன் நிதர்சனும்.... (எனது பார்வையில்)




கசியவிடப்பட்ட  ஐநா அறிக்கை...
இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போரக்குற்றங்களை புரிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படித்திகிறது...
ஐநா நடவடிக்கை எடுக்கப்படும்...

என்கிற தகவல் எல்லா இணையத்திலும் பத்திரிகைகளிலும் செய்திகளை ஆக்கிரமித்து கிடக்கிறது...

'இலங்கைக்கு ஐநா பாதுகாப்பு வழங்கப்படாவிடின் சீனா, ரஷ்யாவை நாட நிற்பந்தம் ஏற்படும்' என்ற பாதுகாப்புச் செயலாளரின் அறிக்கை 'மக்களுக்காக நான் மின்சாரக் கதிரையைக்கூட ஏற்பேன்' என்று அறிக்கையாக நீளுகிறது இந்த நாடகம்.





தெற்கை ஆக்கிரமித்துள்ள இந்த செய்திகள் உண்மையில் வடக்கிலோ, கிழக்கிலோ பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதே உண்மை. போர்க்குற்றங்கள் பற்றி அறிய ஐநா அறிக்கை ஒன்றும் இங்கு தேவையில்லை. எது உண்மை என்று எல்லாருக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு கால யுத்தம் செய்துவிடாத ஒன்றை ஐநா அறிக்கை செய்துவிடப்போவதில்லை என்ற கருத்தே மேலாக ஓங்கி நிற்கிறது. 'எவ்வளவோ பாத்திட்டம் இவங்கள் என்ன புதிசா செய்யப்போறாங்கள்' என்ற நிலையே உள்ளது.



ஐநா அறிக்கை இலங்கை அரசிற்கு எதிராக இருந்தாலும். அதை அடுத்து எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட முயற்சி எடுக்கப்பட்டாலும் அதை சீனாவோ, இந்தியாவோ, ரஷ்யாவோ நிச்சயம் தடுக்கும் என்றும் அறிந்த விடயம். இதை எல்லாவற்றையும் மீறி என்ன நிகழ்ந்தாலும் அது காலம் கடந்ததாகவே கருதப்படும்.



வன்னியில் இருதரப்பு யுத்தத்திலும் இறந்திவிட்ட எத்தனையோ அப்பாவிப் பொதுமக்கள் மீண்டு வரப்போவதில்ல. எண்ணெய் வளம் இருப்பதால் லிபியா மீது இருந்த கரிசனம் அன்று தமிழன் மீது இருக்கவில்லை.
தமிழர்கள் தங்களை ஒரு சிறுபான்மை இனமாக ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கை முறையை அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். அவர்களை பொறுத்தவரை தீர்வுத்திட்டம் பற்றியோ ஏன் கடைசி மாகாண சபை பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லை. அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபை தேர்தல்கள் வாக்களிப்பு சதவீதங்கள் இதற்கு சான்று பகிர்கின்றன.  அவர்கள் தங்கள் தேசிய வியாதியான 'மறதி'யை பெற்றுவிட்டார்கள். இப்போது வாழ்வதுதான் இயல்பு வாழ்க்கையும் என்ற நிலை வந்துவிட்டது.


நீண்ட தூரம் ஓடி விட்ட களைப்பு ஏற்பட்டுவிட்டதகவே தமிழர்கள் உணர்கிறார்கள். தமிழனை பொறுத்தவரை அவன் இலவு காத்த கிளி. இது வருத்தப்ப்ட கூடிய ஒன்றுதான் ஆனால் இதுதான் நாங்கள் நிதம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிதர்சனம்...



No comments:

Post a Comment