Friday, February 25, 2011

The Motorcycle Diaries - வாழ்க்கைப் பயணங்கள்




 '​சே குவேரா'... பெயரை சொல்லும் போதே அதிரும் மறைந்த சரித்திரம். நினைவுகளில் வாழ்ந்து வரும், புரட்சி மற்றும் மக்கள் சக்தியின் அடையாளம். தன் வாழ்க்கையை மக்களுக்காக இழந்த உண்மையான கதாநாயகன். இதுவரை எழுந்து வீழந்த புரட்சிகளும் இனி எதிர்காலத்தில் வரவிருக்கும் புரட்சிகளுக்கும் ஒரு விடிவௌ்ளியாக இருக்கிறார். அவரது வாழக்கை சுவடுகள் பல புரட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது.

அஸ்தமாவால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தும் தன் சுயநலத்திற்காக வாழ்ககையை வாழாமல் ஏகாதிபத்தியத்தை அதுவும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் நாடு, உறவு, காதல் என்பவற்றைத் துறந்து கியூபா, கொங்கோ, பொலிவியா என்று பன்முக சமூக அமைப்பின் மக்களின் விலங்குகளை அவிழ்ததெறிய பாடுபட்ட ஒரு மாமனிதர். வருத்தமும், துரோகமும் பின்தொடர்நது வந்தாலும் தன் இலக்குகளிலிருந்து வழுவாமல் இருந்தார். ஆடம்பரத்தை வெறுத்தார். கியூபாவில் தனக்கு கொடுக்கப்ட்ட அமைச்சர் பதவியை துச்சமாக மதித்து தொழிலாளர்களுடன் தொழிலாளர்களாக நின்று மூட்டை தூக்கினார், வண்டில் இழுத்தார். தான் கொண்ட பொதுவுடைமை வாதத்திற்கு எடுத்துக்காட்டாக நின்றார். கொங்கோவில் சர்வாதிகார பிடியில் சிக்கிய மக்களின் அவலக்குரல் கேட்கவே தன் பதவியை தூாக்கி எறிந்து கொங்கோவிற்கு விரைந்தார். அவருடைய
"Hast La Vigi Oria Siembre" (ஒன்றில் மரணம் அல்லது வெற்றி) என்று முடியும் பிடல் கஸ்டுரோவுக்கான கடிதம் வரலாற்றின் மறக்கமுடியாத வார்த்தைகளும் தருணங்களும். அப்படிப்பட்ட சே குவேராவின் வாழ்க்கையில் புரட்சி பற்றிய சிந்தனையை வித்திட்டு ஒரு சாதாரணமானவனிலிருந்து ஆசீர்வதிக்கப்ப்ட்டவராக மாற்றியது மோட்டார் சைக்கிளில் அவர் சென்ற தென் அமெரிக்க பயணங்கள்.



அவருடைய The Motorcycle Diariesஜ வாசித்த எவனும் புதிதாய்ப் பிறப்பான். வாழ்ககையின் புதிய பரிமாணங்கள் அவன் முன் விரியும். அப்படி ஒரு உணர்வு வெளிப்பாடும் பொதுப்படையான நோக்கும் அந்த நூலில் இருக்கும்.  வாழ்ககையை வாழத்துடிக்கும் இரு இளைஞர்களின் வாழ்வோடான புரிதல்களின் சாராம்சமே இந்த பயணங்கள். இதை சே தனது குறிப்புக்களில் இவ்வாறு கூறுகிறார்.
"What we had in common - our restlessness, our impassioned spirits, and a love for the open road."

அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தொடரினை மையப்படுத்தி 2004ஆம் ஆண்டு வெளிவந்ததே இந்த திரைப்படம். 

அவரது மோட்டார் சைக்கிள் டயரியின் தமிழ் மொழிபெயர்ப்பை நான் வாசித்தேன். அதன் பின்னரே இந்தப் படத்தை பாரக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தப்புத்தகத்தில் சே இயற்கையின் வர்ணணைகளோடு உணர்வுகளிற்கும் வர்ணம் தீட்டி தன் எண்ணங்களை அழகாக பிரதிபலித்திருப்பார்.

 இந்தப் படத்தை பார்ககச் செல்லும் போது என் எதிர்பார்ப்பை நிச்சயம் திருப்தி செய்யாது என்றே எண்ணிச் சென்றேன். அதற்கு முக்கிய காரணம் இதன் இயக்குனர் Walter Salles பெரிதும் பிரபலமில்லாதவர். அத்தோடு படம் முழுதும் அர்ஜென்டிய மொழியிலேயே எடுக்ப்பட்டிருக்கும். உபதலைப்புக்களையே நம்பி இருக்க வேண்டி இருக்கும்.

ஆனால் படத்தை பார்த்து அதிர்ந்துபோனேன் என்பதே உண்மை. அதை அணுஅணுவாக ரசித்தேன். சேயாக வரும் Gael Garcia Bernal மற்றும் அல்பெடர்டோவாக வரும் Rodrigo De La Seran அற்புதமாக நடித்திருந்தார்கள். ஒரு ஆவணப்படத்தை எதிர்பார்த்துச சென்றேன் ஒரு உயிர்ப்புள்ள படத்தை பார்த்து கண்ணீருடன் வெளியேறினேன்.

இந்தப்படத்தை பற்றி விமர்சிப்பதற்கு எதுவுமில்லை. உணர்வுபூர்வமான ஔிப்பதிவே இந்தப்படத்திற்கு மிகப்பெரிய சக்தி. ஆனால் நெஞ்சில் நீங்காத சில கட்டங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இருவரும் ஒரு வயதானர் ஒருவரின் வீட்டில் தங்க அனுமதி கேட்பார்கள். அப்போது அந்தக்கிழவன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்க சே தான் ஒரு மருத்துவன் என்றும் அல்பெர்டோ தான் ஒரு இரசாயாணவியல் ஆராய்ச்சியாளர் என்று அறிமுகப்பப்படுத்த. கிழவன் தன் கழுத்தில் உள்ள கட்டியைக்காட்டி இது என்னவென்று கேட்க அல்பெர்டோ அந்தக் கிழவனை சமாதானப்படுத்தி வீட்டில் இடம் பெறும் பொருட்டு சாதாரண கட்டி என்று பொய் சொல்ல சே இல்லை அது புற்றுநோய்க் கட்டி என்று முகத்திற்கு நேரே சொல்வது அற்புதம்.

பின் வயதுபோன மூதாட்டிக்கு சே வைத்தியம் பார்க்கும் காட்சி ஒரு மென் கறுப்பு பின்னணியில் திரையாக்கப்பட்டிருக்கும். அதில் Gael பிரதிபலிக்கும் உணர்வுகளும் பின்னணியில் ஒலிக்கும் குரல் சொல்லும் சொற்களும் உண்மையில் கண்ணீரைத் தரும்.

சிலி எல்லையைக்கடக்கும் போது சே சந்திக்கும் இரு ஏழைக் கணவன் மனைவியரின் கதையும் அவர்கள் மேல் கொண்ட பரிதாபத்தால் தன்னிடம் அவருடைய காதலி தந்த இறுதிப்பணத்தைக் கூட தானம் செய்துவிட்டு வரும் காட்சிகள் அழகு. இவ்வாறு தொடரும் காட்சிகளில் உச்சக்கட்டம் தொழுநோய் மருத்துவமனையில் சேயின் காலகட்டங்கள்.



அந்த காட்சிகளில் பிரிதிபலிக்கப்படும் உணர்வுகள் வார்த்தைகளில் விவரிக்கமுடியாதவை. அதற்கு நீங்கள் கட்டாயம் இந்தப் படத்தை பாரகத்தான் வேண்டும். தயவுசெய்து பாருங்கள். அதிலும் தொழு நோய் மருத்துவமனையில் சேயின் இறுதி வார்த்ததைகளை தத்தரூபமாக நடித்து காட்டியிருப்பார்.

இறுதியாக படம் முடிந்த பின்னர் உண்மையாக சேவுடன் பயணம் செய்த அல்பெர்டோ வயதான தோற்றத்துடன் திரையில் தெரிவார். சேகுவேராவை பின் தொடரும் பலருக்கும் அந்த காட்சி நிச்சயம் நெஞ்சு உருகும்.

இந்தக் கட்டுரையில் சில முக்கியமான கட்டங்களை தவிர்த்தே எழுதியுள்ளேன். இது உங்களை இந்தப் படத்தை பாரக்க நிச்சயம் தூண்டும்.






மெல்லிய பின்னணி இசையுடன் பல வர்ண மக்களை கறுப்பு வௌ்ளை புகைப்படமாக காட்டி படம் முடியும். இந்தப் படத்தை பற்றி கூறுவதென்றால் சேகுவேரா தன் டயரிகளில் எழுதிய வார்த்தைகளையே கூறவேண்டும்.
"Wandering around our America has changed me more than I thought. I am not me any more. At least I'm not the same me I was. "



இந்தப்பயணங்கள் வாழ்கையின் பயணங்கள்....

No comments:

Post a Comment